டெல்லியில் ஆளுநர்! மத்திய உள்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார்!

0
117

தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக சட்டசபையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இன்றுவரையில் ஆளுநரும், மத்திய அரசும், காலதாமதம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் 6 நாட்கள் வாகனம் மற்றும் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், தமிழக ஆளுநர் நேற்று இரண்டு நாள் பயணமாக திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அதோடு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தொடர்பான மசோதா மீது ஆளுநர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டிருக்கிறார் என்று தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ரவி இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்போது நீட் விளக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசின் சார்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த சந்திப்பு நடைபெறும் போது அது தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் எடுத்துரைப்பார் என்று கருதப்படுகிறது.