Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசு வேலை.. பெண்கள் மட்டும் விண்ணப்பம் செய்யவும்!! மாதம் ரூ.12000/- ஊதியம்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 25!!

#image_title

தமிழக அரசு வேலை.. பெண்கள் மட்டும் விண்ணப்பம் செய்யவும்!! மாதம் ரூ.12000/- ஊதியம்!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் அக்டோபர் 25!!

தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வருகின்ற அக்டோபர் 25 ஆம் தேதி வரவேற்கப்பட இருக்கின்றன.இந்த பணி முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

விண்ணப்பதாரர்கள்: பெண்கள் மட்டும்

நிறுவனம்: மாவட்ட இயக்க மேலாண்மை (தூத்துக்குடி)

பதவி: வட்டார ஒருங்கிணைப்பாளர்

பணியிடம்: தூத்துக்குடி

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02

கல்வித் தகுதி:

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.அத்தோடு கணினி அறிவு மற்றும் MS OFFICE தெரிந்திருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர்அமைப்பு  தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 28 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்:

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஒப்பந்தம் முறை

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தகுதியும் விருப்பமும் இருக்கும் நபர்கள்  thoothukudi.nic.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.பின்னர் அதை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடி முறையிலோ விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 25-10-2023

விண்ணப்பம் செய்ய வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம்,மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,இரண்டாவது தளம்,கோரம்பள்ளம் 628101,தூத்துக்குடி மாவட்டம்.

Exit mobile version