Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!!

Tamil Nadu has become a drug state because of the Chief Minister - H Raja!

Tamil Nadu has become a drug state because of the Chief Minister - H Raja!

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கஞ்சா போதையால் இளைஞர்கள் சிலர் அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கியது, சாலையில் பார்த்தவர்களை எல்லாம் கத்தியால் வெட்டியது என அட்டகாசம் செய்திருந்தனர்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தமிழக முதல்வர் ஸ்டாலினால் தான் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்திய குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுகூட பரவாயில்லை ஆனால் இந்த விவகாரத்தை நீங்கள் கண்டிக்க கூட இல்லை.
அப்படி என்றால் தமிழகம் போதை பொருளின் காடாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? அதேபோல ஜாஃபர் சாதிக் போதை பொருள் மூலம் சம்பாதித்த பணத்தில் மங்கை என்ற படத்தை எடுத்து வருகிறார். அந்த படம் யார் யாருடன் தொடர்புடையது என்பதை மக்களுக்கு தெரிவியுங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்டுள்ளது. அது சமூகநீதி ஆட்சியில் சமூக அநீதி. அதேபோல வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. சமூக நீதி மேல் எள்ளளவு கூட நம்பிக்கை இல்லாத முதல்வர் முதலில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத அரசாங்கமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஓய்வெடுக்க முதல்வர் கொடைக்கானல் வேறு சென்றுள்ளார். இங்கு நாங்கள் பெட்டியை காக்க இரவும் பகலும் கண்விழித்து காவல் காத்து கொண்டிருக்க அவர் மட்டும் குடும்பத்துடன் ஜாலியாக இருப்பாரா?” என்று பலரும் கேள்வி கேட்பதாக எச் ராஜா கூறியுள்ளார்.
Exit mobile version