கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்த சாதனை இது தான்! முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

0
131

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் மழை பெய்ய தொடங்கியது பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது.

சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வடியாமல் இருக்கிறது பல பகுதிகளில் மாநகராட்சி சார்பாக மின் மோட்டார்கள் வைத்து நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மழையின் காரணமாக, வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.அதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

சென்னையில் மழை நீர் தேங்கி இருக்கின்ற 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என்று சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஆழ்வார்பேட்டையில் வெள்ள நீரை வெளியேற்றும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் நிருபர்களிடம் ஒரு சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.

அதாவது எப்போதும் வானிலை ஆய்வு மையத்தில் இருந்து முன் எச்சரிக்கை விடுக்கப்படும் ஆனால் இந்த முறை அவர்களே எதிர்பாராமல் மழை பெய்திருக்கிறது. வெள்ள நீரை வெளியேற்றும் பணி இன்றைக்குள் சரிசெய்யப்படும் விரைவில் மழை நீர் முழுவதுமாக அகற்றப்படும் என்று கூறியிருக்கிறார்

சென்ற பத்து வருடங்களாக தமிழகத்தை நாசமாக்கி வைத்திருக்கிறார்கள் விமர்சனம் செய்வதற்கு தயாராக இல்லை அடுத்த பருவத்தில் அனைத்தும் சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர்.