திடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!

0
164

தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்து பல்வேறு கட்சிகளில் இணைவது வழக்கமாகி வருகிறது. தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்து வரும் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பது அனைவரும் அறிந்தது தான்.

இவர் கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அங்கே பாஜகவின் தலைவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அரசியலுக்குள் இவர் நுழைந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளில் இதே போல அடுத்தடுத்து சிலர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். சந்தோஷ் கே மிஸ்ரா, சகாயம் ஐஏஎஸ், அஜய் மூர்த்தி, பின்காலே உள்ளிட்டோர் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்து அவர்களுடைய பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அதேபோல கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ஜாக் மோகன் சிங் ராஜு வெறுப்பு ஓய்வு பெற்றார்.

இவர் விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே கடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் பாஜகவின் சார்பாக அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால் அங்கே வெறும் 7286 வாக்குகள் மட்டுமே வெற்றி படுதோல்வியை சந்தித்தார். அதேபோல சகாயம் ஐஏஎஸ் பெரும் எதிர்பார்ப்பு இடையில் அரசியலுக்கு வந்தார் ஆனால் அவரும் அரசியலில் பெரிதாக நீடிக்கவில்லை.

அதேபோன்று சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் மக்கள் நீதி மையத்தில் இணைந்தார். மேலும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் 2 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில்தான் தமிழகத்தைச் சார்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஷம்பு கல்லுலிகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இவர் இணை தலைமை செயலாளர் என்ற பதவியில் இருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்து தமிழ்நாடு பேட்ச் அதிகாரியானார்.

தற்சமயம் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை செயலாளர் பொறுப்பில் அவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தான் அவர் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். வெறுப்பு ஓய்வு பெறுவதற்காக அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இவர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணிபுரிந்து இருக்கிறார். பல துறைகளின் செயலாளராக பணிபுரிந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே அவர் தன்னுடைய சொந்த மாநிலமான கர்நாடகாவிற்கு செல்ல இருக்கிறார். அங்கே காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்து தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பெல்காம் தொகுதி வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடகாவில் தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான் இவர் காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவை மேற்கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.