Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா?

மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா?

இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கின்றது. தமிழகத்திலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

டெல்லியில் மார்ச் 8ஆம் தேதி நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 50 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டத்தில் மட்டும் 22 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதுக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் எனும் ஊர் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு இங்கு அனுமதியில்லை. டெல்லி மாநாட்டில் பங்கேற்றப் பலருக்குக் கொரோனாவிற்கான அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடமும் கேரளா இரண்டாமிடமும் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Exit mobile version