எதிர்கட்சியை ரவுண்டு கட்டி எதிர்க்கும் தமிழக கட்சிகள்: தி.மு.க ஸ்டாலின் தனித்தலைவர் ஆனார்.
தொடர்ந்து நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் படி தி.மு.க முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் பொதுவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியை எதிர்த்தே பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் இப்பொழுது தமிழகத்தில் நிகழும் சூழ்நிலை என்னவென்றால் அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய அனைத்து கட்சிகளும் திமுக வை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகின்றது.
இப்படிப்பட்ட சூழ்நிலை நிகழ்வது இதுவே முதல் முறை ஆகும். பொதுவாக அனைத்து எதிர்கட்சிக்களும் ஆளுங்கட்சியான அதிமுக வை எதிர்த்து பிரச்சாரம் செய்வது தான் காலம் கலாமாக நடைபெற்று வருகிறது ஆனால் இம்முறை அனைத்து கட்சிகளும் திமுக வை ரவுண்டு கட்டுகிறது. திமுக வை வீழ்த்துவோம் என்பதே அனைத்துக் கட்சிகளின் வேதமாக உள்ளது. இதெல்லாம் போதாது என்று உள்கட்சியிலும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறன்து. பல கட்சி தலைவர்கள் நேரடியாக ஸ்டாலினை மருத்து வருகின்றனர். இதைப் பார்த்தல் “ஒருவரை பத்து பேர் எதிர்த்தால் உண்மையில் யார் பலசாலி? ” என்று அன்று ஒருநாள் ரஜினி கேட்டது தான் நினைவுக்கு வருகிறது. இதன் படி பார்த்தல் தனித் தலைவனாக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.