Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி!! தமிழக காவல்துறை சார்பில் அனுமதி!

#image_title

வருகிற 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version