Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

#image_title

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்  கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் அமைச்சர் உதயநிதி. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு நிகழ்ச்சிகள், மற்றும் தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளர்.

முதலாவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சென்று  திடீர் ஆய்வினை மேற்கொண்டார். அதில் மாணவர்களின் நலன்களை பற்றியும், விளையாட்டு பயிற்சிகளை பற்றியும் ஆய்வுகளை நடத்தினார்.

அதன்பின் காட்டிநாயக்கன் பள்ளியில் அமைந்துள்ள “அரசு திராவிடர் நல பல்தொழில்நுட்பக் கல்லூரி” மாணவர் விடுதியை திடீர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அக்கல்லூரி விடுதி ஆவணங்களில் குளறுபடிகள் இருப்பதை அமைச்சர் உதயநிதி கண்டுபிடித்தார்.

ஏராளமான குளறுபடிகள் அதில் காணப்பட்டதால் அந்த நிமிடமே ஹாஸ்டல் வார்டனை சஸ்பெண்ட் செய்தார்.

Exit mobile version