அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!!

0
102

2020-ஆம் ஆண்டு மட்டுமே தென் இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் விகிக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக மாநில அரசுக்கு போதுமான நிதி கிடைக்காதது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே ரூபாய். 50,000 கோடி கடனாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளில் தமிழகம் முதலிடம் முன்னிலை வகித்து வரும் நிலையில் ,மத்திய அரசிடமிருந்து வரும் நிதி அளவு குறைவாகவே உள்ளது. இருப்பினும் மாநிலங்களின் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியானது அதிகமாகவே இருந்து வருகிறது.

மத்திய நிதி குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்திற்கு கிடைக்கும் நிதி குறைவு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி பெருமான்மையாக இருப்பதன் காரணங்களால் தமிழகத்தின் கடன் சுமையானது, மேலும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.