Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக வெற்றிக் கழக மாநாடு.. கட்சியில் முழுவதும் சர்வதிகாரம் தான்!! குமுறும் தொண்டர்கள்!!

Tamil Nadu Victory League Conference. Grumpy volunteers!!

Tamil Nadu Victory League Conference. Grumpy volunteers!!

TVK NTK: நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் கடந்த மாதம் சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் தனது கட்சி கொடி, பாடல் உள்ளிட்டவற்றை வெளியிட்டார். இதற்கு அடுத்து இம்மாதம் 27ஆம் தேதி விக்ரவாண்டியின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேற்கொண்டு இந்த மாநாட்டில் பிற கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பெரிய தலைகள் தவெக வில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் சமீப காலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக வெளிநடுப்பு செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வெளியேறுவதற்கு ஒரே காரணம் சீமான் தான் என்றும் சர்வாதிகாரம் செய்யும் கட்சியாக மாறிவிட்டது என புகாரளிக்கின்றனர்.அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் அனைத்து அம்மாவட்ட நிர்வாகிகள் வெளியேறியதை அடுத்து தற்பொழுது விழுப்புரம் மேற்கு மற்றும் வடக்கு செயலாளர் உள்ளிட்டோரும் வெளியேறியுள்ளனர்.

அனைவரும் ஒருவித கருத்தைதான் முன்வைக்கின்றனர். குறிப்பாக கட்சிக்காக உழைத்த பலருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை, அதை மீறி கேட்கும் பொழுது தங்களை சுயநலவாதிகள் என கூறுவதை தான் சீமான் செய்கிறார் என வருத்தம் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் அனைவரும் வரும் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Exit mobile version