தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கை!! அமெரிக்காவில் நிறைவேற்றும் அதிபர்!!

0
99
Tamil Nadu's long demand!! Executive President in America!!

தமிழ்நாட்டில் பல காலங்களாகவே திமுக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் கேட்டு வந்த கொள்கைதான் மாநிலக் கல்விக் கொள்கை. தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் கூட இதனை தன்னுடைய கொள்கையில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் மாநில கல்விக் கொள்கைதான் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவர்களால் கொண்டு வரப்பட உள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது மாநில அளவிலான கல்விக் கொள்கையை கொண்டு வரப் போகிறாராம் அதிபர். இந்த மாநில கல்விக் கொள்கையை தேர்தலுக்கு முன்னரே தன்னுடைய அறிக்கையில் டிரம்ப் அவர்கள் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தேசிய அளவில் ஒரு கட்சி வெற்றி பெற்றால், அந்த கட்சி தான் தேசிய அளவில் கல்விக் கொள்கைகளை மாற்றி வருகிறது. எனவே தேசிய அளவிலான அமெரிக்காவின் மத்திய கல்வித் துறையை அதிபர் மூட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக, பிடன் வென்ற போது நாடு முழுக்க கல்வி நிறுவனங்களில் ஜனநாயக கட்சி கொள்கையை கொண்டு செல்லப்பட்டன. இது டிரம்பின் குடியரசு கட்சிக்கு சிக்கலாக அமைந்தது. முக்கியமாக குடியரசு கட்சி வலுவாக இருக்கும் சிவப்பு மாநிலங்களில் கூட ஜனநாயக கட்சியின் கொள்கைகள் திணிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கடுமையாக டிரம்ப் அவர்கள் எதிர்த்துள்ளார். இதனால் தான் ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய கல்வி துறையை மூடிவிட்டு, மாநிலக் கல்வித் துறையை துவங்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.எதிர்காலத்தில் ஜனநாயக கட்சி வென்றால் கூட.. குடியரசு கட்சி மாநிலங்களில் எந்த விதமான கல்வி ரீதியிலான மாற்றங்களையும் செய்ய கூடாது என்பதால் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாநில கல்வி கொள்கைக்கான போராட்டங்கள் குறித்து பார்ப்போம் :-

மத்திய பாஜக அரசு, கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அதனை இந்தியா முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வந்த நிலையில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது.

தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு அமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.