20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

0
184

உலகம் தோன்றிய பின் மனிதர்கள் தோன்றிய முதல் குடி தமிழ் குடி என்று கீழடி அகழ்வாராய்ச்சி விளக்குகிறது.கீழடி அகழ்வாராய்ச்சி என்பது 20,000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நாகரீக மற்றும் பண்பாட்டு வாழ்விடங்களை பூமிக்குள் புதைந்து இருப்பதனை தோண்டி எடுக்கும் ஒரு அகழ்வாராட்சி செயலாகும்.

பல வருடங்களாக கீழடி அகழ்வாராய்ச்சி நடந்து வரும் நிலையில் ,தற்போது 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியுள்ளது.ஏற்கனவே இந்த அகழ்வாராய்ச்சியில் இருக்கும்பொழுது பத்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், குடிமக்களின் தாலி, விலங்குகளின் எலும்புக் கூடுகள் ,பாசிமணிகள் ,சங்கு வளையல் போன்ற பொருட்கள் இங்கிருந்து எடுக்கப்பட்டு வந்தது.

சிவகங்கையில் கீழடி அகழ்வாராய்ச்சி 6 -ஆம் கட்டம் ,கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துவங்கி தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது ஐந்து அடுக்கு உறை கிணறு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.கடந்த ஐந்து கட்ட அகழ்வாராய்ச்சியின் பொழுது கண்டறியப்பட்ட பொருட்களை போலவே மனிதர்களின் வாழ்வில் நடைமுறைகள், தொன்மையான பண்பு ,வாழ்வியல் மற்றும் அவர்களது இன மரபியல் உள்ளிட்டவற்றை அறியும் வகையில் ஐந்து கட்டம் முடிந்தன.தற்பொழுது ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கீழடியை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் ,மணலூர் போன்ற இடங்களில் அகழ்வாராட்சி தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறானது, சில உரை அடுக்குகள் இருக்கும் என்பதால் இதனை முழுமையாக கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த உரையானது சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இருக்கலாம் என தொல்லியல் துறையினர் அறிவிக்கின்றனர்.மேலும் கீழடி அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஆராய்ச்சியின் செய்யப்பட்டு, பொருட்கள் கண்டறியப்பட்டு வருவது தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 6- ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி முடிவடைய உள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு பணி இருப்பதால் அகழ்வாராய்ச்சி பணியானது தொடரும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.