சமீபத்தில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சிக்கு மும்மொழிக் கொள்கை குறித்த தலைப்பு எடுக்கப்பட்ட பொழுது அதனை தடை செய்து திடீரென வேறொரு தலைப்பு கொடுக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது நீயா நானா தொகுப்பாளரான கோபிநாத் அவர்களுக்கு திமுக முத்திரை குத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொறுத்தவரை சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் மிகப்பெரிய அளவில் ஜெயித்திருக்கிறார்கள் என்றும் அந்த வரிசையில் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா என அனைவரும் தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கும் பாஜகவினர் இதனை நன்கு உணர்ந்ததால் தான் தமிழகத்தில் இருக்கக்கூடிய தொலைக்காட்சிகளை தன் வசப்படுத்தி இருப்பதாகவும் தொலைக்காட்சிகளில் என்ன இருக்க வேண்டும் என்பதை பாஜகவினரே முடிவு செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, பாஜகவிற்கு எதிராகவும் திமுகவிற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் என புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிந்த குணசேகரன் என்பவரை நீக்கியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதுபோன்ற ஒரு நிலைதான் விஜய் டிவி தொகுப்பாளர் ஆன கோபிநாத் அவர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது.
தமிழகத்தில் அரசியல் செய்கிற அனைத்து கட்சிகளுக்கும் தங்களுக்கு என தனி தொலைக்காட்சிகள் இருப்பது மக்களிடம் நேரடியாக தங்களுடைய ஆளுமையை செலுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக பாஜகவினரால் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தற்பொழுது விஜய் டிவி ஆனது பாஜகவினரால் மிரட்டப்பட்டுள்ளது. விஜய் டிவியில் தொகுப்பாளர் கோபிநாத் இருக்கும் வரையில் திமுக அரசிற்கு சாதகமாக மற்றும் பாஜகவிற்கு எதிரான விஷயங்கள்தான் ஒளிபரப்பப்படும் என நினைக்கும் பாஜகவினர் கோபிநாத் அவர்களை இந்த தொலைக்காட்சியை விட்டே வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் உண்மை அப்படி அல்ல, தமிழகத்தை பொறுத்தவரை தாய் மொழி மற்றும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் என்பதே கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வட மாநிலத்தில் அப்படி அல்ல அங்கு ஆங்கிலம் என்பதே கிடையாது ஹிந்தி மட்டுமே ஒரே மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் அவர்களுடைய மொழியை ஏன் நாங்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கு நடைபெறக்கூடிய மூன்றாவது மொழித் திணிப்பாக பார்க்கப்படுகிறது.