தமிழ் ‘வேரியன்ட்’ கலைஞன்! – சிம்பு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!!
தமிழ் திரையுலகை தன் சிறுவயதிலிருந்து தற்போது வரை பன்முக திறமைகளால் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகர் சிம்பு.
*குழந்தை பருவம்*
இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குனரான டி. ராஜேந்திரன் மகனாவர். தந்தை இயக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னுடைய சினிமா வாழ்வை ஆரம்பித்தார். பிறகு தனது தந்தை இயக்கத்தில் 2002ல் காதல் அழிவதில்லை படத்தில் கதநாயகனாக அறிமுகமனார்.
*திரைப்பயணம்*
கடந்த 2004 ல் ஹரி இயக்கத்தில் வெளியான கோவில் படம் சிம்புவின் முதல் ஹிட் படமாகும். இப்படத்தை தொடர்ந்து தம், அலை, குத்து போன்ற படங்களில் நடித்தார்.
சிம்பு தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். இவரின் ஸ்டைலனா கையில் கர்ச்சீப்பையும், காதில் கடுக்கானையும் பலர் பின்தொடர்ந்து, என்னவென்று கேட்டால் சிம்பு ஸ்டைல் என்று இதுவரை கூறி வருகின்றனர்.
வல்லவன், மன்மதன் போன்ற படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார் சிம்பு. வல்லவன் படத்தில் இவர் எழுதி பாடி இருந்த லூசு பெண்ணே பாடல் இப்போதும் பலரின் ரிங்க்டோனாக உள்ளது.
இவர் தொடர்ந்து காதல், காமெடி படங்களில் நடித்திருந்தாலும் தொட்டி ஜெயா படத்தில் எந்த ஒரு அலட்டலும், அலப்பறையும் இல்லாமல் ரவுடி வேடமாக இருந்தும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை பிரதிபலித்து சிம்புவிற்குள்ளும் ஒரு நல்ல நடிகன் இருப்பதை நிரூபித்திருப்பார்.
2010ல் மிகவும் ஸ்டைலிஷ் இயக்குனரான கெளதம் வாசு தேவ் மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் தன்னுடைய ஒட்டு மொத்த நடிப்பையும் வெளிகாட்டி ரசிகர்களிடையே நீங்கா இடத்தை பிடித்தார். இப்படம் மிக பெரிய வெற்றி அடைந்து இன்றும் பலரது பேவர்ட் படங்களில் ஒன்றாக உள்ளது.இது சிம்புவின் 25வது படமாகும். பிறகு அச்சம் என்பது மடமையாடா படத்தின் மூலம் கெளதம் வாசு தேவ் மேனன் கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறியது. அதன் பின் அஅஅ திரைப்படம் பெரிதும் வெற்றி தரவில்லை, கிட்டத்தட்ட முப்பது கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ-என்ட்ரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். சமீபத்தில் இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
*சிம்புவும் வதந்திகளும்*
சிம்பு என்றாலே வதந்தி என்ற அளவிற்கு வதந்திகளுக்கு பெயர் போனவர் சிம்பு. தன்னுடைய ஆரம்பகால சினிமா முதல் இப்போது வரை பல சர்ச்சைகளும், சிக்கல்களிலும் சிக்கி இருக்கிறார் சிம்பு. இவர் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சியில் நடந்த சண்டையின் போது பேசிய ‘எனக்கு நடிக்க தெரியாது சார்” என்ற வார்த்தை இன்றும் வைரலாகி உள்ளது.
*விருதுகள்*
சிம்புவிற்கு 2006ல் கலைமமாணி விருது கொடுக்கப்பட்டுள்ளது.
வானம் திரைப்படத்திற்காக ஐடிப்சி சிறந்த விருது.
விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகர் மற்றும் விஜய் விருதுகளின் சிறந்த நடிகர் , தமிழ் எப்எம் சிறந்த பொழுதுபோக்னருக்கானா விருது அளிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
*சிம்பு திருமணம்*
40 வயதாகியும் திருமணமாகாத நிலையில் அவரது பெற்றோர் பெரும் கவலையில் உள்ளனர். இவர் இப்போது நடிகை நிதி அகர்வாலுடன் உறவில் இருப்பதாக ரசிகர்களிடையே ஒரு பேச்சு உள்ளது,சிம்புவின் தந்தை ராஜேந்தர் கூட விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் வருத்தம் தெரிவித்தார். சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் ஒருவழியாக சிம்புவிற்கு பெண் பார்க்கப்பட்டு உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், சினிமா ஃபைனான்சியருமான ஒருவரின் மகளை சிம்பு திருமணம் செய்து கொள்ள போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தற்போது STR 48 திரைப்படம் 2025ல் திரைக்கு வரவுள்ளது.