தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பேன் என்றும் பேசினார்.2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் எண்ணமாக இருக்கிறது. எனவே, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக போன்ற கட்சிகளோடு அவர் கூட்டணி அமைப்பாரா இல்லை தனித்து போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் நடக்கவுள்ளது.
இந்த கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இதுபோக, 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
மேலும், 500 பேருக்கு காலை உணவும், 2500 பேருக்கு மதிய உணவும் வழங்கப்படவுள்ளது. காலை உணவாக பொங்கல், வடை, சட்னி, சாம்பார், மதியம் சாப்பாடு பட்டியலில் மால் பூவா ஸ்வீட், வெஜ் சூப், ஊறுகாய், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, சப்பாத்தி, பன்னீர் மட்டர் மசாலா, வெஜ் மட்டன் பிரியாணி, சாதம், சைவ மீன் குழம்பு, சாம்பார், மிளகு ரசம், இறால் 65, அவியல், ஆனியன் மணிலா பகோடா, உருளை பட்டாணி வருவல், தயிர் வடை, அப்பளம், வெத்தலை பாயாசம், மோர், ஐஸ்கீரீம் போன்றவை இருக்கிறது.
கட்சி ஆண்டுவிழாவில் உணவு வழங்வதில் சில குளறுபடிகள் நடந்தது. அமர்ந்து கூட சாப்பிட முடியாமல் நிர்வாகிகள் நின்று கொண்டே சாப்பிட்டார்கள். அதுபோல நடக்க்கூடாது என விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கவனிக்க இன்று காலை 7 மணிக்கே விஜய் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்.