எவரெஸ்ட் சென்ற தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

0
233
#image_title

எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் மலை ஏறி சாதனை!

எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருந்தாலும், மலையேற்றத் தொடர் பயணத்தில் ஆர்வம் கொண்ட பலர், எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை கோவளத்தை சேர்ந்த 27 வயது இளைஞன் ராஜசேகர் எவரெஸ்ட் மலை உச்சியை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.கடந்த ப்ரல் 13 ம் தேதி எவரெஸ்ட் மலையேறும் பயணத்தை தொடங்கிய ராஜசேகர் மே 19 ம் தேதி வெற்றிகரமாக பயணத்தை முடித்துள்ளார்.

ராஜசேகர் அலைசறுக்கு போட்டியில் சர்வதேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ள நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை தொட வேண்டும் என்ற கனவோடு பயணித்து இப்போது எவரெஸ்ட் மலையேறி சாதனை படைத்துள்ளார்.