தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..??

0
443
Tamilisai Selandararajan's pornographic film in ZOOM meeting..Women left in shock..!! what happened..??

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..??

தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் அவரின் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தமிழிசை செளந்தரராஜன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

களத்தில் சென்று நேரடியாக பிரச்சாரம் செய்வது தவிர ஆன்லைம் மூலமும் வீடியோ காலில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தென்சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாக சங்கத்தினருடன் ZOOM வீடியோ கால் மூலம் தமிழிசை செளந்தரராஜன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது மர்ம நபர் ஒருவர் இந்த மீட்டிங்கில் அவரது ஸ்கீனை ஆன் செய்து சில ஆபாச புகைப்படங்களை காட்டியுள்ளார். அதனை பார்த்து சில அதிர்ச்சி அடைந்து உடனடியாக மீட்டிங்கில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டனர். அதன் பின்னர் தான் தமிழிசை இதனை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மீட்டிங்கை கேன்சல் செய்துள்ளார். 

தற்போது அந்த நபரிடம் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழிசை இதுகுறித்து, ”இன்று நான் ஆன்லைனில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது சில விஷமிகள் ஆபாச படங்களை பரவவிட்டு நான் அவர்களுடன் உரையாடுவதை தடுத்து விட்டார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.