Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்! நாளைய தினம் பொறுப்பேற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி மாநிலத்தின் தொழில் நிலை ஆளுநராக நாளைய தினம் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க இருக்கிறார்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தொடர்ந்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் விதமாக பாஜகவின் தூண்டுதலின் பெயரில் தான் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அங்கே குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரம் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தேவையான பெரும்பான்மை 16 இடங்களில் 14 இடங்கள் மட்டுமே இருக்கிறது அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதற்கிடையில் நான் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றையதினம் மத்திய அரசால் அதிரடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த பதவிக்கு தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்தநிலையில், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டிருக்கும் அவர் நாளைய தினம் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆக பொறுப்பேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்து வரும் அவருக்கு புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆகக் கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கிறது. நாளை காலை சுமார் 9 மணியளவில் அவர் பொறுப்பேற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version