chennai: வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை சவுந்தரராஜன் கைது.
வங்க தேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பேரணியில் இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்கும் இஸ்கான் அமைப்பு தலைவர் சினமாய் கிறிஷ்ணா கைது தேச துரோக வழக்கில் கைது செய்யப்படார். அதன் பிறகு இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் டாக்கா தலைநகரம் மற்றும் துறைமுக நகரங்களில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது.
அந்த நாட்டு பிரதமர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். தற்போது இடைநிலை தலைவராக முகமது யூனுஷ் பதவி ஏற்று இருக்கிறார். இருப்பினும் அந்த நாட்டில் இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல், பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடந்து வருகிறது. இதனை எதிர்த்து ஆர்.எஸ் .எஸ்., மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை எழும்பூரில் வங்க தேச இந்துக்கள் மீது வன்முறை தாக்குதலை எதிர்த்து பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை ஏற்று நடத்தி வந்தார். இந்த போராட்டத்தில் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன், துணைத் தலைவர் தனசேகரன் என கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த போராட்டத்தை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். போலீசார் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் 500 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.