Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

#image_title

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

புதுச்சேரி மற்றும் தெலுங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழக பாஜக தலைவர், துணை பொதுசெயலாளர், பாஜக தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை 2006,2011 ம் ஆண்டு பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் மற்றும் 2009,2019 ஆய ஆண்டு மக்களவை தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி புதுச்சேரி ஆளுநராக பொறுப்பெற்றார் தொடர்ந்து தெலுங்கானா துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட ஏதேனும் ஒரு மக்களவை தொகுதியில் பாஜக சார்ப்பில் போட்டியிட தனது ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.

ஆளுநர் என்பது நிர்வாக பொறுப்பாக இருப்பினும் மக்களை சந்தித்து நேரடியாக அவர்களது வாக்கினை பெற்று நிர்வாகப் பொறுப்பிற்க்கு வர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கும் நிலையில் அவர் வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புண்டு.

இந்த செயலின் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடவுள்ளார் என்பது நிருபனமாகிறது.

Exit mobile version