தமிழக அரசின் உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 6- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!!

0
123

கடந்த ஜூன் இரண்டாம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் அவர்கள் வழக்கறிஞர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தலா 3,000 உதவித்தொகை அளிப்பது பற்றி கூறினார்.அதைப்பற்றி அவர் பேசுகையில்

சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருடையை நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதிச்செய்வது சட்டம். இப்படிப்பட்ட சட்டத்தை நிலைநாட்டுவதில் வழக்கறிஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.வழக்கறிஞர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு.

சட்டப்படிப்பினை முடித்து சட்டக் கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெற்று அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற்ற பிறகே தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் கல்லூரி படிப்பு முடித்த பின்பு மேலே கூறிய அனைத்யையும் முடிக்க மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகிவிடும்.

இதனால் கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு தங்களை வழக்கறிஞர்களாக நிறுத்திக் கொள்ள இயலாமல் வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிடுகின்றன.

இதுபோன்று தற்போது வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒரு சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இதன்படி, இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறினார்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் பார் கவுன்சிலில் பதிவு செய்த இளம் வழக்கறிஞர்கள் வருகின்ற ஆறாம் தேதி முதல் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்குரிய இணையதளத்தையும் தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

a n d.bctnpy.com என்ற இணைய தளத்தில் விருப்பமுள்ள இளம் வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். சமமந்தப்பட்ட இளம் வழக்கறிஞர்கள் வங்கி கணக்கில் உதவித்தொகை சேர்க்கப்படும் எனவும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.