Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டெழும் சோழர்களின் வரலாறு! சட்டசபையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்த திமுக ஆட்சியில் அமர்ந்த தில் இருந்தே ஒரு சில விஷயங்களை செய்து வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு பொதுமக்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் வெகுவாக பிரபலமாகி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்துக்களின் ஓட்டை பெறுவதற்காக ஒரு சில முக்கிய விஷயங்களை அவர் முன்னெடுத்து இருக்கின்றார். அது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது ஆனால் அவருடைய இந்த முன்னெடுப்பது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது எதிர்வரும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

திமுக என்றாலே எப்போதும் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு கட்சி என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டார்கள் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அதனை உடைக்கும் முயற்சியில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் இறங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் அரசியலின் சித்து விளையாட்டு என்பது பாமர மக்களுக்கு தெரியாது நன்கு விபரம் அறிந்த ஒரு சில அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே இது தெரிவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அதாவது தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி குறித்த முக்கியமான 10 அறிவிப்புகளை என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டிருக்கிறார் தமிழ் மண்ணை மட்டுமல்லாமல் தெற்காசியாவில் ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் வழித்தடத்தை தேடிச் செல்லும் விதத்தில் இந்த ஆராய்ச்சி அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அவருடைய இந்த அறிவிப்புக்குப் பின்னால் இருப்பது நிச்சயமாக வன்னியர்களின் வாக்குகளை பெறும் ஒரு தந்திர நடவடிக்கை தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. இருந்தாலும் மறைக்கப்பட்ட உண்மை வரலாறு என்னவென்று அனைவரும் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தமிழக அரசு இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுக்கும் முடிவில் தற்சமயம் இறங்கியிருக்கிறது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல வியக்கத்தக்க முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்த முடிவு செய்து இருக்கிறது கடலுக்கு அடியில் ஏயும் கடல்கடந்தும் ஆய்வு மேற்கொண்டு திட்டத்தில் தமிழக அரசு தற்சமயம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறது.

ராஜராஜ சோழனுக்கு பின்னால் தெற்காசிய அதையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜேந்திரசோழன் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணம் செய்து வாணிகம் செய்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய வணிகம் செய்த பகுதியாக தமிழகம் அப்போது இருந்தது இதற்கான வரலாற்றுச் சான்றுகளும் இருக்கின்றன. இந்த சான்றிதழ் அடிப்படையிலேயே சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

ஆனால் இந்த உத்தரவிற்கு பின்னால் பாமக போன்ற சமூக நீதியை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியை பறிக்கும் முயற்சி இருக்குமோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சி என்பது வன்னியர்களுக்கு என்று ஆண்டாண்டு காலமாக உரிமை குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம்.அப்படியிருக்கும்போது வன்னியர் வம்சா வழியாக வந்த ராஜராஜ சோழன் தொடர்பாகவும் ராஜேந்திர சோழன் தொடர்பாகவும் பல ஆய்வுகளை நடத்தி அவர்கள் தொடர்பான மறைந்துபோன வரலாறுகளை பொது மக்களுக்கு எடுத்துரைப்பது மூலமாக திமுக வன்னியர்களுக்கு எதிரான கட்சி இல்லை என்பதை பொதுமக்களுக்கு நிரூபிக்க முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்.

அப்படி அவர் முன்னெடுக்கும் முயற்சி வெற்றி பெற்றால் அது நிச்சயமாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாதிப்பை உண்டாக்கும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது.முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றும்போது இன்று வெளியீடு இருக்கின்ற 10 முக்கிய அறிவிப்புகள் என்னவென்றால் திருநெல்வேலியில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது பொறுமை அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆற்றங்கரை நாகரீகம் ஆதிச்சநல்லூர் சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளை கொண்டது பொருநை ஆற்றங்கரையில் நாகரீகம்.

அகழ்வாய்வுகளில் முன்னெடுக்கப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனை முடிவின் அடிப்படையில் கொற்கைத் துறைமுகம் கிமு எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே செயல்பட்டு வந்து இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் வரலாற்று முசிறி நகரம் தற்சமயம் கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் இருக்கிறது தமிழ் வரலாற்று கொண்ட சேர நாட்டின் முதன்மை பண்பாட்டினை அறிந்து கொள்வதற்காக கேரள தொல்லியல் வல்லுநர்களுடன் ஒன்றிணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆதிச்சநல்லூர் சிவகளை உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்காவிற்கு சோதனைக்கு என அனுப்பப்பட்ட.து கார்பன் டேட்டிங் சோதனையில் இந்த நெல்மணிகள் காலம் கிமு 1155 என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு, ஒடிசா மாநிலத்தில் பாலுர் உட்பட வரலாற்று இடங்களில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.அதோடு கீழடி நாகரிகம் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கார்பன் டேட்டிங் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ரோம் பேரரசின் ஒரு பகுதியாக எகிப்து மற்றும் ஓமன், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பல பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார். கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடுதுறை, கங்கைகொண்டசோழபுரம், உள்ளிட்ட பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு கடலடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறியிருக்கிறார் முதலமைச்சர்.

ராஜேந்திர சோழன் தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய வாணிகம் புரிந்த தமிழ் மன்னன் நம்முடைய வணிகப் பயணம் தெற்காசியா முழுக்க அந்த சமயத்தில் மேலோங்கி இருந்தது. ராஜேந்திர சோழன் வெற்றி தடம் பதித்த தெற்காசிய பகுதிகளில் ஆய்வுகள் செய்யப்படும் நாடுகளில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிற 10 அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version