மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

0
157

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

ரஜினி நேற்று பாஜகவை பற்றி பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் சேகர் பதிலளித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை அடக்காமல் விட்டது தொடர்பாக டெல்லி போலிஸார், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெல்லி விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி கலவரம் தொடர்பாக நேற்று பத்திரிக்கையாளர்களை தனது வீட்டில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ’கலவரத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அடக்காதது உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசு சரியான நேரத்தில் செயல்பட தவறிவிட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருக்கும் நேரத்தில் இது போல அவர்கள் நடக்க விட்டிருக்கக் கூடாது.

போராடும் மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் குடியுரிமைத் திருத்த சட்டத்தை அவர்கள் திரும்ப பெறபோவதில்லை. இரு அவைகளிலும் அது தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதனால் அதற்கு எதிராகப் போராட வேண்டாம். மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. அப்படி செய்பவர்களை நான் கடுமையாக கண்டனம்  தெரிவிக்கிறேன். என்னை பாஜகவின் ஊதுகுழல் என மூத்த பத்திரிக்கையாளர்களே சொல்வது மிகவும் வேதனை அளிக்கிறது.’ எனக் கூறினார். முதன் முதலாக ரஜினி பாஜகவை விமர்சித்து பேசியது தமிழக்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக அரசு மீதான இந்த விமர்சனத்துக்கு தமிழக பாஜக பொருளாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘உளவுத்துறை தோல்வி என்றும் பாஜக அரசின் நிர்வாகக் குறைபாடு  என சொல்வதும் ரஜினியின் அறியாமை. மேலும் மற்றவர்களை போல மலிவான அரசியல் செய்வது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல’ எனக் கூறியுள்ளார்.