Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரக்காணம் வருகிறாரா?.இல்லம் தேடி கல்வி திட்டம்:

வீடு தேடி கல்வி திட்டத்தை துவக்கி வைக்க இருக்கும் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (27ம் தேதி) மரக்காணம் வருகிறார்.

மேலும்,கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கல்வி கற்கும் முறை இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வீடு தேடிக் கல்வி’ என்னும் திட்டத்தை அறிவித்ததுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் முறைகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது.

இத்திட்டமானது, தமிழகத்தில் கடலூர், விழுப்புரம்,ஈரோடு, திண்டுக்கல்,கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர்,நீலகிரி, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய 12 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலியார்குப்பம் பகுதியில் வீடு தேடி கல்வி என்ற திட்டத்தின் தொடக்கவிழாவை நாளை (27ம்தேதி) மாலை 3 மணிக்கு நடக்க இருக்கிறது . இதில் தமிழக முதல்வராகிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு இத்திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.

மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கிறது. மாவட்ட எல்லையான மரக்காணத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விழாவை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

விழாவை முன்னிட்டு முதலியார்குப்பத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாக நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் அவர்கள் நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன், டிஐஜி பாண்டியன், கடலூர் சக்தி கணேசன் ,எஸ்பிக்கள் விழுப்புரம் நாதா, ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று விழா நடக்கும் இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தபோது ஆட்சியர், எஸ்பி, விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத், மரக்காணம் வட்டாட்சியர் உஷா மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை,சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளில் இருக்கும் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மரக்காணம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் மஸ்தான் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் வந்து செல்லும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், முதல்வர் அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு பொருத்தப்பட்டுள்ளது .

Exit mobile version