தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உதயமாகிறது! எந்த மாவட்டம் தெரியுமா?

0
160

தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள்,

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட நிலையில் தற்போது மேலும் இரண்டு மாவட்டங்கள் அறிவிக்க படும் என அறிவித்தார்.

அதாவது செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் புதிய மாவட்டங்கள் ஆகும். என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி நெல்லையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், இரண்டு புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாகியுள்ளன.

மக்களின் எண்ணிக்கையும் அதன் பரப்பளவும் அதன் வளர்ச்சியும் பொறுத்து அப்பகுதியை முன்னேற்ற இது போல தனி மாவட்டங்கள் உருவாக்க படும். தற்போது அந்த வகையில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டமாக உதயமாக உள்ளது.

எனில் பிரிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி சேர்த்து 35 மாவட்டங்கள் இருக்கப்பெரும். இதனால் செங்கல்பட்டு, தென்காசி சேர்ந்த மக்களுக்கு ரொம்ப நாள் கனவு நிறைவேறும்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.