Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை! மத்திய அரசிற்கு முதல்வர் அவசர கடிதம்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் , இந்த தொற்றுக்கான தடுப்பூசிக்கு தமிழகத்தில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. தட்டுப்பாட்டை நீக்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தில் செங்கல்பட்டில் இருக்கின்ற ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசு செயல்படுத்தும் ஆனால் அங்கே தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யலாம் எனவும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து அதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக செங்கல்பட்டு தடுப்பூசியை நேரில் சென்று ஆய்வு செய்த முதல் அமைச்சர் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது. அதோடு செங்கல்பட்டு தடுப்பு மையத்தை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த சூழலில் செங்கல்பட்டு மத்திய அரசின் இந்த தடுப்பூசி உற்பத்தி ஆலையை குத்தகைக்கு விட உத்தரவிட வேண்டும் என்று தமிழக முன்னாள் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version