தமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

0
112

தமிழகத்தில் விரைவில் 3ஆம் அலை?! இந்த மாவட்டங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 33,665 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலமாக இரண்டாவது அலையானது விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதிலும், கேரளாவில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும், கேரள மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10.8 சதவீதமாக காணப்படுகிறது. தற்போது 1,10,141 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலமாக கேரளாவில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதா?என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரளா மாநிலத்தின் கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு தேனி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் வீடுதோறும் மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காய்ச்சல் மற்றும் பரிசோதனை முகாம்கள் தேவைப்படும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து கொரனோ அறிகுறிகளுடன் எவரேனும் வந்தால் அவர்களை தமிழக அரசு தனது எல்லைக்குள் அனுமதிப்பதில்லை.

இதற்காகவே எல்லைப்பகுதியில் மருத்துவக் குழுவினர் சிறப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலமாக கேரளாவிலிருந்து கொரோனா தொற்று வராமல் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.