தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது தெரியுமா? வெளியானது தேர்தல் ஆணையத்தின் சீக்ரெட்!

0
237

தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து, தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை முடிவு செய்வதற்காக பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி, மற்றும் 21ஆம் தேதி ஆகிய தினங்களில் தேர்தல் ஆணையத்தின் கூட்டமானது நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் காவல் துறை இயக்குனர், தலைமைச் செயலாளர் ,மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் போன்றவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

அன்னையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை செய்திருக்கிறார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுவை, கேரளா, தமிழகம், அசாம் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தேர்தல் சமயத்தில் மத்திய பாதுகாப்பு படையினரின் தேவை தொடர்பாக மத்திய அரசுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் இந்தத் தேர்தல்கள் தள்ளிவைக்கபடுவதற்கான சூழ்நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே பள்ளிகளில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம், தமிழ்நாட்டின் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடுதல் வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்தல், அதற்கு உண்டான இடங்களை தேர்வு செய்தல், வாக்காளர் பட்டியலை தயார் செய்தல், போன்ற பணிகளை மிக மும்முரமாக செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

ஆகவே தற்போது தேர்தல் ஆணையம் நடத்தப்போகும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அடிப்படையிலே, பிப்ரவரி மாதம் கடைசியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது தமிழ்நாட்டின் சட்டசபை தேர்தல் மே மாதம் 5ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.