தமிழர்கள் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான அரிசி சர்க்கரை உள்ளிட்டவைகளை வழங்கி வரும். மேற்கொண்டு பரிசுத் தொகையாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த தொகையானது மக்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பெரும் வகையில் இருக்கும். இதனை மாற்றி அமைத்து அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தர விமலநாதன் என்பவர் மனுதாக்கல் சென்றிருந்தார்.
இந்த வழக்கானது நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்த நிலையில் தமிழக அரசு இது குறித்து தனது தரப்பு வாதத்தை தெரிவித்தது. அதில், அனைவரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தும் பட்சத்தில் ஏதேனும் பணம் பிடித்தம் செய்யப்படும். இதுவே நேரடியாக தருவதன் மூலம் இது தவிர்க்கப்படலாம் என க் கூறினர்.
மேலும் உயர்நீதிமன்றமானது , எப்படி மகளிர் உரிமை தொகையானது வழங்கப்படுகிறதோ அதே போல இதனையும் வழங்க ஏற்பாடு செய்யலாமே என பல கேள்விகளை முன்வைத்தது மட்டுமின்றி இது குறித்து தெளிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. மேற்கொண்டு இந்த வழக்கானது வரும் ௧௦௦=19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.