Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

#image_title

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர் கனமழை காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த 7 ஆம் தேதி நடைபெற விருந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மழை பாதிப்பில் இருந்து இந்த 4 மாவட்டங்களும் முழுமையாக மீளாத காரணத்தினால் நாளை அதாவது டிசம்பர் 09 ஆம் தேதி அம்மாவட்டங்களின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வருகின்ற 11 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

Exit mobile version