பெண்களுக்கு சொந்த நிலம் தரும் தமிழக அரசு! உடனே விண்ணப்பியுங்கள்!

0
151
Tamilnadu government to give women their own land! Apply now!

Free Land: தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச நிலம் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதற்கான காரணம் பெண்களின் நலனை மேம்படுத்துவது ஆகும். இதன் விளைவாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார் .

அதில் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் “நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்” செயல்படுத்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை பெண்களின் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்படுகிறது. அதில் புதுமைப்பெண் திட்டம், இலவச பஸ் வசதி என பெண்களின் பாதுகாப்புக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் எளிதாக நிலம் வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த நில உடைமை திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 50% அல்லது ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சில விதிமுறைகள் உள்ளன. அது என்னவென்றால்  விண்ணப்பதாரரின் பெயரில் எந்த ஒரு விவசாய நிலமும் இருக்க கூடாது, ஆனால் அவரது தொழில் விவசாயமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த திட்டம் முழுக்க முழுக்க விவசாயம் செய்வதற்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயத்தை மேம்படுத்துவது ஆகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை மேம்படுத்துவதற்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாங்கிய நிலத்தை பத்து ஆண்டுகளுக்கு விற்க கூடாது, மேலும் இதன் மூலம் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை  நிலம் 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.