பெண்களுக்கு 18000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
322
Tamilnadu government will give 18000 rupees to women.. How to apply? Important announcement issued by the government!

பெண்களுக்கு 18000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசித்து வரும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகாலத்தில் மகப்பேறு நிதியுதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது.”டாகடர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி” என்ற பெயரில் இயங்கும் இந்த திட்டத்தின் கீழ் தவணை முறையில் ரூ.18,000 வழங்கப்படுகிறது.

பெண்கள் கருவுற்ற 12 வாரத்திற்குள் தங்களுக்கு அருகில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆதார் கார்டு,பேங்க் பாஸ் புக் இந்த திட்டத்திற்கு தேவைப்படும் முக்கிய ஆவணமாகும்.கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14,000 நிதியுதவி மற்றும் ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்ய உடனே முதல் தவணை தொகை ரூ.2,000 கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.அடுத்து இரண்டாவது தவணை தொகை ரூ.2,000 நான்காவது மாதத்தில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

ஆனால் தற்பொழுது “பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா” திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் இனி மூன்று தவணைகளாக ரூ.14,000 நிதியுதவி வழங்கப்படும்.

இந்நிலையில் தாய்-சேய் அடையாள எண் பெற கர்ப்பிணிகள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைக்கும் விதத்தில் பிக்மி என்ற இணையதளத்தில் அனைத்து கர்ப்பிணிகளின் விவரங்களையும் பதிவு செய்து 12 இலக்க தாய் -சேய் அடையாள எண் வழங்கப்படுகிறது.

இதன் வாயிலாக அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு நடைபெறும்.கர்ப்பிணி பெண்கள் https://picme.tn.gov.in/ picme public என்ற இணையத்தளத்தில் ஆதார் மற்றும் கர்ப்பத்தை உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றி அடையாள எண் பெறலாம் என்று கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.