Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்! தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!!

பொங்கல் பரிசும், சிறப்பு பேருந்துகளும்; தமிழக அரசின் தரமான ஏற்பாடு..!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளின் அடிப்படையில் அரிசி, ஏலக்காய், கரும்பு, சர்க்கரை, உலர் திராட்சை ஆகிய பொங்கல் பரிசு உணவு வகைகளும் 1000 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது.

இன்றிலிருந்து வரும் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும், பொருட்களை சரியான நேரத்தில் வாங்காதவர்கள் 13 ஆம் தேதி வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் இருக்கும் நியாயவிலை கடைக்கு நேரில் சென்று அமைச்சர் ஜெயக்குமார் பரிசு வழங்கும்  நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, நியாய விலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்காக வெளியூரில் இருந்து தனது ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிற்கு ஏற்ப  மொத்தம் 30 ஆயிரத்து 120 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள்  உட்பட இயக்கப்படும் என்றும், சென்னையில் இருந்து மட்டும் 16 ஆயிரத்து
75 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை தொடங்கி வைத்து பேசினார்.

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Exit mobile version