Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்!! 

Tamilnadu government's super scheme to provide Rs.50,000 for the birth of a girl child!!

Tamilnadu government's super scheme to provide Rs.50,000 for the birth of a girl child!!

தமிழகத்தில் பிறக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் முதல் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

பெண் குழந்தைகள் பிறந்தால் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தரமாக குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்கின்றார்கள் எனில் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு 1 குழந்தைக்கு 25,000 ரூபாய் முறையே 2 குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று இந்த செய்தி குறிப்பு சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை முதலில் பெண் குழந்தை பிறந்த அதன்பின் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது எனில் அவர்களும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு குடும்பத்தில் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து கணவனோ அல்லது மனைவியோ குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டால் அவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது எனில் ஒரு பெண் குழந்தைக்கு 25,000 ரூபாய் வீதம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் விதம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலில் பெண் குழந்தை பிறந்து இரண்டாவது ஆக இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கிறது என்றால் அவர்களுக்கு ஒரு குழந்தைக்கு 25,000 வீதம் மூன்று பெண் குழந்தைகளுக்கு 75,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :-

✓ தாயாரின் மாற்றுச்சான்று
✓ தந்தையின் மாற்றுச்சான்று
✓ திருமண பத்திரிக்கை, முதல் குழந்தை பிறப்பு சான்று
✓ 2 ஆம் குழந்தை பிறப்பு சான்று
✓ வருமான சான்று ரூ.1,20,000 க்குள் இருக்க வேண்டும்
✓ இருப்பிடச்சான்று
✓ ஜாதிச்சான்று
✓ ஆண் வாரிசு இல்லாத சான்று
✓ தாயார் (அ) தந்தையின் கருத்தடை செய்த சான்று (40 வயதுக்குள் இருக்க வேண்டும்)
✓ ரோட்டரி வழக்கறிஞரிடம் 2 பெண் குழந்தைக்குப்பின் ஆண்குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என்று உறுதி மொழிப் பத்திரம்
✓ குடும்ப புகைப்படம்
✓ குடும்ப அட்டை

குறிப்பு :-

இந்தத் தொகை முழுவதும் டெபாசிட் பத்திரங்களாக வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் பத்திரங்கள் பெண் குழந்தைகள் 18 வயது நிறைவடைந்த உடன் முதிர்வடைந்து அவர்கள் நேரடியாக பெற்றுக் கொள்ளும் வண்ணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version