Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பதவியேற்ற கையோடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த ஆளுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்! நடுக்கத்தில் தமிழக அரசு!

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் சென்றவாரம் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆளுநர் பதவி காலியானது இதனையடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக மேகாலயா மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் மேகாலயாவில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்டோர் ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

இந்த சூழலில் தமிழ் நாட்டின் 15வது ஆளுநர்களாக ரவீந்திர நாராயணன் ரவி இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் தன்னுடைய அமைச்சரவையை அறிமுகம் செய்து வைத்தார். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் வந்து ஆளுநருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற ரவீந்திர நாராயணன் ரவி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வணக்கம் என்று தமிழில் தெரிவித்து தன்னுடைய உரையை தொடங்கினார். உலகின் பழமையான நாகரிகத்தை கொண்ட மக்கள் வாழும் பகுதியான தமிழ்நாட்டின் ஆர்வலராக பொறுப்பேற்று இதில் எனக்கு மகிழ்ச்சி என கூறியிருக்கிறார் ஆளுநர்.

அதோடு தமிழ்நாட்டிற்கு ஆளுநராக பொறுப்பேற்று இருப்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன், என்னால் இயன்ற வரையில் தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசியல் முன்னேற்றத்திற்கு நான் பாடுபடுவேன். எல்லோருக்கும் நன்றி ஆளுநர் பொறுப்பு ஏற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்து வாழ்த்திய எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள் என தெரிவித்திருக்கிறார்.அதோடு தமிழ் மொழியை நான் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய உள்ளேன் மிகக் குறைந்த காலத்தில் பத்திரிகையாளர் ஆக பணிபுரிந்து வருகின்றேன். தமிழ்நாட்டில் பணிபுரிவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது. தமிழ்நாட்டில் சேவை புரிவது தான் என்னுடைய முதல் வேலையாகும் என கூறியிருக்கிறார் ஆளுநர் ரவி.

அரசியலமைப்பு கொடுத்திருக்கும் அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டில் என்னுடைய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வேன், பொது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது. என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு நான் பணிபுரிவேன் தமிழக அரசு நோய்த்தொற்றை மிகச் சிறப்பான முறையில் கையாண்டு இருக்கிறது என கூறியிருக்கிறார்.அதோடு தமிழகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் தொடர்பாக இப்போது தெரிவிக்க இயலாது ஒரு சில காலங்கள் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மாவட்ட ஆய்வு பணிகள் தொடர்பாக தற்போது எதுவும் கூற இயலாது என்று கூறியிருக்கிறார் ஆளுநர்.

தற்போது வரையில் தமிழகத்தில் இதுவரையில் ஆளுனராக பொறுப்பேற்று இருக்கின்ற யாரும் மாவட்டம்தோறும் ஆய்வுக்கு சென்றது கிடையாது. ஆனால் தற்போது பொறுப்பேற்றிருக்கும் ஆளுநர் ரவி மாநிலம் முழுவதும் ஆய்வுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி ஆய்வு செய்தால் இதனால் ஆளும் கட்சியான திமுக பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என கூறுகிறார்கள், இதனால் திமுக அதிர்ச்சியடைந்து இருக்கிறது.

Exit mobile version