களைகட்டும் பொங்கல் விழா! ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

0
118

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. 2017 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகின்றது. அதிலே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் மந்திரிகளும் பங்கேற்றார்கள். கொரோனா தொற்று காரணமாக பல நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த வருடம் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்து வந்தன.

இந்தநிலையிலே, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு இன்றையதினம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவில் இதற்கு முன்னரே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு வெளியிடப்பட்டிருக்கின்றன நெறிமுறைகள் உடன் இப்போதும் தொற்று காரணமாக வரும் 2021 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு ,மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு கீழே எண்ணிக்கை இருக்குமாறு வீரர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது. என்ற முக்கியமான நிபந்தனையை தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. அதோடு ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்வில் 150 வீரர்களை தாண்டாமல் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது .இந்த நிகழ்ச்சிகளில் திறந்தவெளியில் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ,அதிகபட்சமாக 50 சதவீத அளவிற்கு பார்வையாளர்கள் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பார்வையாளருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்வில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்று கொள்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடங்களில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்கும் அனைவரும் முகக் கவசம் அணிவது, அதோடு தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.