Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொந்த பந்தம் இல்லாமல் 10 நிமிடத்தில் எளிமையாக நடந்த திருமணம்! 20 பேர் கூட வரவில்லை..!!

சொந்த பந்தம் இல்லாமல் 10 நிமிடத்தில் எளிமையாக நடந்த திருமணம்! 20 பேர் கூட வரவில்லை..!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உறவினர்கள் இல்லாமல் எளிமையான முறையில் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்தியுள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உலக நாடுகளை அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், முக்கிய தேவைகளை தவிர்த்து மற்ற எந்த காரடத்திற்காகவும் வெளியே வர வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பொது இடங்களில் ஐந்து பேர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் கையையும் உடலையும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்ட முரளிதரன் மற்றும் மீனா புதுமண தம்பதியின் திருமணம் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் மிக எளிமையாக நடந்தேறியது. இவர்களது திருமணத்திற்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மாப்பிள்ளை வீட்டார் மற்றும் மணப்பெண் வீட்டார் சார்பிலும் வெறும் 8 பேர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் வாசலிலும், சாலையிலும் உற்றார் உறவினர்கள் இல்லாமல் மிகவும் எளிமையாக பல திருமணங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version