Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த தமிழகம்!

சென்ற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்ட சூழ்நிலையில், அதையும் தாண்டிய நிலையில், கூடுதலாக 8 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நேற்று இரண்டாவது முறையாக 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்றைய தினம் பொது மக்கள் மிகவும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 16.43 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக சென்னையில் 2,01,805நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்தி முப்பத்தி ஆறு நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு ஆயிரத்து 793 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், நேற்று மாலை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பத்திரிக்கை நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக தடுப்பூசி முகாமுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது இதுவரையில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 4. 35 கோடி நபர்களுக்கு தடுப்பூசி எழுதப்பட்டு இருக்கிறது. இதில் 4.12 கோடி தடுப்பூசி அரசே செலுத்தி இருக்கிறது கையிருப்பில் இருக்கின்ற தடுப்பூசி நேற்றுடன் முடிவடைந்து விடும் என்ற காரணத்தால், கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

Exit mobile version