உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை.!!

0
135

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகரும் என்பதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி,தூத்துக்குடி திருநெல்வேலி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது. இன்று முதல் 31-ம் தேதி வரை குமரி கடல் மற்றும் மன்னர் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50கி.மீ முதல் 60கி.மீ வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்