விமானத்தில் புகை பிடித்த தமிழக பயணி! பணிப்பெண்கள் செய்த காரியம்!

0
181
#image_title

விமானத்தில் இருக்கையில் அமர்ந்தபடி புகை பிடித்த பயணியை விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண்கள் புகை பிடிக்கக் கூடாது என்று கூறிய நிலையில் பயணி மறுத்துள்ளார். அதற்கு பணிப்பெண்கள் புகை பிடித்த அந்த பயணிக்கு தகுந்த தண்டனை வழங்கியுள்ளனர்.

பொதுவாக பேருந்து, இரயில் போன்ற போக்குவரத்துகளில் பயணம் செய்யும் பொழுது புகைப்பிடிப்பதற்கும் சரி மது அருந்துவதற்கும் சரி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி இரயிலில் ஒரு சில பயணிகள் யாருக்கும் தெரியாமல் மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். கிராமப்புறங்களில் பேருந்துகளில் ஒரு சிலர் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

எப்படி பேருந்து, இரயில் போன்ற போக்குவரத்துகளில் புகை பிடிக்க தடை இருக்கின்றதோ அதே போல விமானத்தில் புகை பிடிக்க தடை இருக்கின்றது. அந்த தடையை மீறும் நபர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அந்த வகையில் சென்னையிலிருந்து மலேசியா நோக்கி செல்லும் விமானத்தில் பயணி ஒருவர் புகை பிடித்துள்ளார். அதற்கு பணிப்பெண்கள் அந்த பயணிக்கு தகுந்த தண்டனை வழங்கியுள்ளனர்.

நேற்று(ஜூன்9) சென்னையில் இருந்து மலேசியா நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் விமானத்திற்குள் வந்து இருக்கையில் அமர்ந்தார். பின்னர் ஆறுமுகம் சிகரெட்டை எடுத்து புகை பிடிக்க தொடங்கினார்.

ஆறுமுகம் அவர்கள் புகை பிடிப்பதை பார்த்த விமானப் பணிப்பெண்கள் அவரிடம் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டு புகை பிடிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் ஆறுமுகம் என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது என்று கூறி புகை பிடித்தார்.

இதையடுத்து புகை பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டும் ஆறுமுகம் தொடர்ந்து புகை பிடித்த நிலையில் விமானப் பணிப்பெண்கள் அவரை விமானத்தை விட்டு கீழே இறக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் 10 மணிக்கு புறப்பட வேண்டிய மலேசிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.