Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு!

மணிப்பூரின் புதிய ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.இந்த மாத தொடக்கத்தில் நஜ்மா ஹெப்துல்லா ஓய்வு பெற்ற பிறகு கவர்னர் பதவி காலியாக இருந்தது.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார்.ஆகஸ்ட் 10ஆம் தேதி ஹெப்துல்லா தனது பதவியை விட்டு வெளியேறினார்.அதே நாளில் சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் 70களில் எமர்ஜென்ஸி கலவர காலக்கட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பித்து சுமார் ஒருவருட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.தமிழ்நாடு பாரதிய ஜனதாவிலிருந்து தொடர்ந்து ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்படும் காலம் இது. தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அந்த வரிசையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.76 வயதான கணேசன் 1945ல் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தவர். அரசியல் ஈடுபாடு காரணமாக திருமணம் செய்துகொள்ளலாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறு வயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் சமூக வேலைகளில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தது பின்னாளில் அவரை ராஜ்ய சபா எம்.பி. பதவி வரை உயர்த்தியது.இளைஞராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் 70களில் எமர்ஜென்ஸி கலவர காலக்கட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பித்து சுமார் ஒருவருட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

அந்த நாட்களில் தற்போதைய தமிழ்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுடன் நட்புறவில் இருந்துள்ளார்.பின்னர் 1991ல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார்.2009 மக்களவைத் தேர்தலிலும் 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார்.தற்போது இல.கணேசன் ஆளுநராக பதவியேற்க உள்ளார்.

Exit mobile version