வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் டிசம்பர் மாதம் 15ஆம் தேதியான இன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நிவர், மற்றும் புரெவி,புயல்கள் உருவான காரணத்தால், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, என்று பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புயலுக்குப் பின்னர் ஒரு சில நாட்களில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது, ஆனாலும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகின்றது.
அதே சமயத்தில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மாலை 6 மணிக்குப் பிறகே பணி பொழிவின் தாக்கத்தை மக்களால் உணர முடிகின்றது. சென்னையை பொருத்தவரையில் பகல் நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் பணி பொழிவு என்று இரு வித்தியாசமான வானிலை நிலவி வருகின்றது.
இந்த நிலையிலேயே, இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிடுகின்ற அறிக்கையிலே,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 15ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி ,மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரையும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும் இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள் ,மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், அதோடு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
சென்னை மற்றும் அதைச் சுற்றிய இருக்கின்ற புறநகர் பகுதிகளை பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகருடைய ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.