#| ####
மே 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை தென்காசி, தேனி, திண்டுக்கல் மிக கனமழைக்கு (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்புள்ளதாகவும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 19ஆம் தேதி குமரி நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே 20 ஆம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடித்திருந்த சிகப்பு எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 20 ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே 21 ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 30 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இயல்பாக மார்ச் 1 முதல் இன்று காலை வரை கோடை மழை 97 மி.மீ அளவுக்கு பதிவாகும். ஆனால் இன்று காலை வரை 68 மி.மீ அளவு மழை மட்டுமே பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.