தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

0
97

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாரின் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஐந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். நோய் நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குதல் உள்பட மொத்தம் 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதனையடுத்து நியாய விலை கடை பணியாளர்கள் ரூபாய் இரண்டாயிரம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணிகளை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், டோக்கனில் குறிப்பிட்டு இருக்கின்ற நேரம் மற்றும் தேதிக்கு நியாயவிலை கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைதாரர்கள் 2000 ரூபாயை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி நடப்பு மாதம் 2,000 ரூபாயும் எதிர்வரும் ஜூன் மாதம் 2000 ரூபாய் ஆக மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வரும் 16 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளில் பணியாளர்களுக்கு வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளிலும் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு மாற்று விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.