தமிழ்நாட்டில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது மாநில அரசு. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று வரையில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்து 597 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 378 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள். அதன்படி மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 906 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நோய் தொற்றிலிருந்து 29 ஆயிரத்து 243 முழுமையாக நலன் பெற்றதை அடுத்து மொத்த நலன் பெற்றோரின் எண்ணிக்கையானது 21 லட்சத்து 20 ஆயிரத்து 889 ஆக அதிகரித்திருக்கிறது.
சென்னையை பொருத்தவரையில் நேற்று வரையில் 1623 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 123 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவமனைகளில் மொத்த சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவரின் எண்ணிக்கை 1.88 லட்சமாக இருந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் நேற்று வரையில் அதிகபட்சமாக 2056 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக நோய் தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் இது மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் ஒன்று முதல் இரண்டு வாரத்தில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழே குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.