Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வட இந்தியர்களின் ஆதிக்கத்தால் வேலை இழக்கும் தமிழர்கள்!! அரசு எடுக்க போகும் முடிவு என்ன!!

Tamils ​​are losing jobs due to the dominance of North Indians!! What decision is the government going to take!!

Tamils ​​are losing jobs due to the dominance of North Indians!! What decision is the government going to take!!

தமிழகத்தில் வட இந்தியர்களின் அதிகமானது சிறிது சிறிதாக தொடங்கி இன்று பல பெரிய நிறுவனங்கள் வரை வேரூன்ற ஆரம்பித்திருக்கின்றனர். முதலில் பிழைப்பிற்காக பணம் தேடி தின கூலிகளாக தங்கள் வாழ்வை தொடங்கிய இவர்கள் இன்று தமிழர்களின் வேலைவாய்ப்பை பிடுங்கக்கூடியவர்களாக மாறி இருக்கின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகரில் பாலிமர் எனப்படும் நிறுவனத்தில் மிகுந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அதாவது அந்நிறுவனத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த 90-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்திருக்கிறது.

இதனை கேட்ட பொழுது மூன்று முறை சம்பளத்தை பிரித்து பிரித்து கொடுத்ததாகவும் நிறுவனத்தில் லாபம் இல்லை என்றும் நிறுவனத்தால் இயன்றதை மட்டுமே சம்பளமாக வழங்க முடியும் என்றும் தெரிவித்ததோடு விருப்பமிருந்தால் பணிபுரியும் படியும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக முடிவெடுத்து யாரையும் உள்ளே அனுமதிக்காதவாறு போராட்டம் நடத்த முடிவு செய்து போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர். ஆனால் அந்நிறுவனம் வடமாநிலத்தவரை நிறுவனத்தில் உள்ளேயே தங்க வைத்து உள்ளிருந்தே வேலை பார்த்தது இவர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

முன்பெல்லாம் தின கூலிகளாகவும் சிறு சிறு வேலைகள் மட்டுமே செய்து வந்த வட மாநிலத்தவர்கள் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அளவு வளர்ந்து விட்டனர். இதனால் தமிழர்களுடைய வேலை மற்றும் வாழ்வின் நிலை அனைத்தும் மோசமாகி கொண்ட செல்வதால் தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

Exit mobile version