Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செடிகளில் கொத்து கொத்தாய் காய் பிடிக்கச் செய்யும் “தேமோர் கரைசல்”!!

#image_title

செடிகளில் கொத்து கொத்தாய் காய் பிடிக்கச் செய்யும் “தேமோர் கரைசல்”!!

உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய நிலையில் ஆரோக்கிய உணவு கிடைக்குமா என்றால் கேள்விக்குறி தான்.

குறுகிய காலத்தில் பயிர்களை உற்பத்தி செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் பயிர்களுக்கு கெமிக்கல் நிறைந்த பூச்சி விரட்டியை பயன்படுத்துகின்றனர்.

கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், சுரைக்காய், பீர்க்கன், பாகல், புடலை போன்ற பல செடி கொடி காய்கறிகளில் பூ பூத்தவுடன் தேமோர் கரைசலை தெளித்து விட்டால் பூக்கள் உதிராமல் அனைத்தும் பிஞ்சி பிடிக்கும்.

பூக்கள் பிஞ்சி பிடிக்க கெமிக்கல் பொருட்களை செடிகளுக்கு தெளிப்பதை தவிர்த்து இயற்கையாக தயாரிக்கப்படும் தேமோர் கரைசலை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)தேங்காய்

செய்முறை:-

ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் 1 லிட்டர் வெண்ணை நீக்கிய மோர் ஊற்றி மூடி போட்டு 5 தினங்களுக்கு புளிக்க வைக்கவும்.

5 நாட்களுக்கு பிறகு தேங்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட தேங்காய் பால் ஒரு லிட்டர் அளவு எடுத்து புளிக்க வைக்கப்பட்ட மோரில் ஊற்றி மேலும் 3 தினங்களுக்கு புளிக்க வைக்கவும்.

தேங்காய் பால் + மோர் நன்கு புளித்து வந்ததும் அதை 8 தினங்களுக்கு ஒருமுறை என்று மாதத்தில் 2 முறை செடிகளில் தெளித்து விடவும். 1 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற அளவில் தேமோர் கரைசல் சேர்த்து செடிகளின் பூக்கள் மீது தெளிக்கவும்.

Exit mobile version