Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவர் என்னை வாழ விடவில்லை! கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ட்ராவல்ஸ் உரிமையாளர்!

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவண செல்வம். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும், இருக்கிறார்கள். சரவண செல்வம் தான் நடத்தி வந்த டிராவல்ஸ் அருகில் டெய்லர் கடை வைத்திருக்கும் தனலட்சுமி என்பவருடன் கடந்த சில வருடங்களாக தொடர்பிலிருந்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்துள்ளனர். ஆகவே அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது. அது குறித்து இருதரப்பைச் சார்ந்தவர்களும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள்.

ஆகவே கடந்த சனிக்கிழமை இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு சரவண செல்வம் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்த கடிதத்தில், தனலட்சுமி தன்னை வாழ விடவில்லை என்றும் தன்னுடைய மரணத்திற்கு தனலட்சுமி அவருடைய குடும்பத்தினரும் தான் காரணம் எனவும், தனலட்சுமிக்கு ஆதரவாக தன் மீது பொய் வழக்கு போடும் ஸ்ரீரங்கம் உளவுத்துறை ஏட்டு திருமுருகன், எழுத்தர் முத்துசாமி, உதவி ஆய்வாளர் அறிவழகன், உள்ளிட்டோர்தான் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதோடு தற்கொலை செய்து கொண்ட சரவண செல்வம் தனலட்சுமியுடன் தனிமையிலிருந்த புகைப்படம் எடுக்கப்பட்டு, அதனை வைத்து மிரட்டியதாகவும், தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Exit mobile version