தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்! தமிழக அரசுக்கு வேண்டுதல் விடுத்த மருத்துவர் ராமதாஸ்!

0
171

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சாரத்தை வாங்கவோ, விற்பனை செய்யவோ மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தன்னுடைய வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 926 கோடி ரூபாயை செலுத்த தவறியதன் காரணமாக, மின் சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது இது மிகப்பெரிய பின்னடைவாகும் என தெரிவித்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.

தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாக தான் தமிழக அரசால் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்குவதை தவிர்த்து மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான் தமிழ்நாட்டின் மின்சார தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறைய தொடங்கியிருக்கின்ற நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு உண்டாகக்கூடும். பொது மக்களின் வாழ்க்கையை மட்டும் அல்லாமல் தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இந்த விவகாரம் பாதிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மண்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விளக்கச் செய்ய வேண்டும். மின்தடை உண்டாகாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும், உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் இதன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.